Englishல ஓரளவுக்கு புரியற மாதிரி எழுத தெரிஞ்ச எனக்கு, தமிழ் எழுத்துக்கள் மொட்டை மாடியில அம்மா காயவைக்கிற வடாம்/வத்தல் மாதிரி வந்து விழுறது ரொம்ப வருத்தமா இருக்கு. பேனா பிடிச்சு எழுதி எவ்ளோ வருஷம் ஆச்சு!! அது ஒரு சுபானுபவம்னு எழுதும் போதுதான் தெரியுது. ஒரு சராசரி Software Engineerஆ நான் அதிகபட்சமா கடைசியா எழுதினது என் Home loan agreementல போட்ட 30 40 கையெழுத்துகள்தான்.அதுவும் ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ரகம். பள்ளியில 4 ஆம் வகுப்பு வரைக்கும் 'Natraj' HB பென்சில் பிடிச்சு எழுதிட்டு திரிஞ்ச நான், எப்போடா 5 ஆம் வகுப்பு போய் 'Hero' பேனா பிடிச்சு எழுதுவோம்னு ஏங்கி காத்திருந்தது நினைவுகளில் நிழலாடுகிறது. கையில, சட்டை பையில எல்லாம் 'Bril' ink கரையோட வீடு திரும்பிய நாட்கள் நிச்சயம் திரும்பப் போறது இல்ல. பேனா பிடிச்சு எழுதும் போது நம்ம எண்ணங்கள் கையெழுத்து மூலமா பேப்பர்ல ஊடுருவி பிரதிபலிக்கிற ஒரு உணர்வு கிடைக்குது. இன்னைக்கு Ipad, Surface விதம் விதமா 'Tablets' வந்து இறங்கினாலும் அவனுங்களும் கையில ஒரு பேனாவ குடுத்து LCD Screenல எழுத சொல்லி 'Technology has improved soo much you know'னு நம்மகிட்டையே அலப்பறை பண்றானுங்க.எழுதுறது குறித்து எழுதும் போது 'கடிதம்/மடல்/லெட்டர் னு வேசுக்குவோமே'..அதை குறிப்பிடாம இருக்க முடியல. நம்மளில் எத்தனை பேரு வாழ்கையில ஒரு முழுமையான கடிதம் எழுதிருப்போம் ? நண்பனுக்கு, உறவினருக்கு, காதலிக்கு , இல்ல வாத்தியாருக்கு 'மொட்டை' கடுதாசி' ?? இல்லவே இல்லையா? அது ஒரு பேரிழப்பு என்று நான் சொல்லுவேன். ஒரு old emailல archiveல இருந்து எடுத்து பார்கிறதை உங்களால ஒரு பழைய கடிதத்தை பார்க்கிற பரவசத்தோட ஒப்பிட முடியுமா? வெளிநாட்டுல இருந்த என் தந்தைக்கு schooltimeல நான் கடிதம் எழுதினது எனக்கு ஞாபகத்துக்கு வருது. ஆனா அதன் பெரும்பகுதி englishல எழுதினதுக்கு இப்போ வருத்தப்பட மட்டும்தான் என்னால முடியுது! என் பள்ளி நண்பன் ஒருவனுக்கு classலயும் labலயும் திருட்டுத்தனமா எழுதி அனுப்பிய ஒரு கடிதமும் பசுமையான நினைவா இருக்கு. இவ்ளோ பேசிட்டு இதை google transliterateல type பண்ணிட்டு இருக்கிறது ஒரு நல்ல எண்ணத்துலதான். நான் பேப்பர்ல எழுதி scan பண்ணி post பண்ணிருந்தா அது என்ன மொழின்னு கண்டுபிடிக்க நீங்க கஷ்டப்பட கூடாதுனுதான்:-)
Friday, November 2, 2012
Saturday, June 16, 2012
flash back..:-)
ஊர் அடங்கிப்போன பின் இரவு நேரங்கள் எப்போதுமே மனசுக்கு மிக நெருக்கமா இருக்கு. 'ஒரு நாளை ஏன்டா அவ்ளோ சீக்கிரம் முடிச்சுக்கணும்?'னு தத்துவம் எல்லாம் சொல்லி ஒரு கூட்டமே ரூம் ரூமா கதை பேசி சுத்தக்கிட்டு திரிஞ்ச ஹாஸ்டல் நினைவுகள் பசுமையா இருக்கு. ஆனா அடுத்த நாளோட பாதி தூங்கியே கழியும்னு எங்களுக்கு தெரியாம ஒண்ணும் இல்ல:-) ராக்கிங்கு பயந்து ஹாஸ்டல் சேர்ந்த சில வாரங்களிலே நைட் ஷோ போற பழக்கம் வந்துடுச்சு. தாம்பரம் வித்யாவ விட மவுண்ட் ரோடு தேவிதான் எங்களுக்கு பிடிச்சுது. அட தியேட்டர் பேருங்க வேறொண்ணும் இல்ல. 'தேவி பாலா'ல ஈவீனிங் ஷோ பார்த்துட்டு டின்னெர் சாப்டர கேப் ல 'அயோயோ 'தேவிகலா' கோவப்பட போறான்னு' டக்குனு நைட் ஷோ போய் எவ்ளோ மொக்கை படமா இருந்தாலும் சினிமாவ வாழ வெச்சுட்டுதான் வருவோம். LIC ஸ்டாப்ல platformல உக்கார்ந்து ஒரு ரவுண்டு கதை பேசிட்டு load இல்லாத லாரி பார்த்து செலக்ட் பண்ணி தலைக்கு 7 ரூபா பேசி திமுதிமுன்னு பின்னால ஏறி ஊர்வலம் மாத்ரி போவோம். பல நூறு sodium vapour லாம்ப் வழி எல்லாம் கடந்து போகும். ஆனா ஒவ்வொரு ஏரியாவும் ஒரு தனி அடையாளத்தோட இருக்கும். பல்லாவரம் தாண்டிடிச்சுனு Ponds company வாசம் சொல்லும். தாம்பரம் தாண்டி இரும்புலியூர் bridge கடந்ததும் அப்டியே ஜிவ்வுன்னு cityஓட population,pollutionல எல்லாம் இருந்து தப்பிச்சு வந்த பின் இரவுப்பனி வந்து காது மடலெல்லாம் சிலிர்திட்டு போகும். வண்டலூர் வந்ததும் லாரில இருந்து குதிச்சுட்டு மாமூலுக்கு பயந்து பாதி பூட்டின கடையில அரைகுறையா எரியுற அடுப்புல ஒரு டீ போட சொல்லி குடிச்சுட்டு ரூம் வந்து அடையும் போது காக்கா குருவி எல்லாம் brush பண்ணி குளிச்சு dutyகு கிளம்பிட்டு இருக்கும்.... பின்நாளில் கார்ல போய் இறங்கி e-டிக்கெட் எடுத்து படம் பார்த்துட்டு மவுண்ட் ரோடுல a/c கார் ல போகும்போது எவ்ளோ trafficலயும் LIC பஸ் ஸ்டாப் ஒரு தடவ பார்க்க தோணுது. ஊருக்கு பஸ்ல போற ஒவ்வொரு தடவையும் வண்டலூர் தாண்டி பஸ் போகும்போது பூட்டி இருக்குற காலேஜ் கேட்'குள்ள ஒழிஞ்சு கெடைக்குற இது போன்ற ஒரு கோடி ஞாபகங்கள் ஒரு நொடி flashbackல coil சுத்தாமலே வந்து போகுது...
Wednesday, June 6, 2012
அனுபவம் புதுமை
பள்ளி நாட்களில் படிப்பை விடவும் நாம நிறைய நல்ல அனுபவங்களை கடந்து சுமந்து வர்றோம். நான் திருவிழா எதுவும் பார்த்ததில்லை. ஆனா அதற்கு ஈடான ஒரு அனுபவத்தை கொடுத்தது Annual School Day functions. பெஞ்ச் எடுத்து போடறதும் stage decorate பண்றதும் மட்டுமே நம்ம பங்களிப்பா இருந்தாலும் அதுல ஒரு தனி ஆர்வம். நாம சுத்தி சுத்தி ஓடி விளையாண்டு தேஞ்சு போன stage புது பொண்ணு மாதிரி அலங்கரிச்சு நிக்குறதை பார்க்கவே அவ்ளோசூப்பரா இருக்கும். எல்லா வருஷமும் ஒரு 'peter' டிராமா, ஒரு தமிழ் சரித்திர டிராமா, குழந்தைங்க கும்மி அடிக்குற டான்ஸ் ஒண்ணு.. சில பல பாட்டு danceன்னு கலை(ளை) கட்டும். பசங்க குரூப்ல பெரிய அப்பாடக்கர் மாதிரி சீன் போட்டு சுத்தினாலும் stageல நின்னு பாடவோ நடிக்கவோ நம்மளால முடியாதுனு நெனைச்சு திறமைக்கு திரை போட்டு ஒதுங்கி நின்னு கலாய்க்குற ஒரு சாமான்ய studentதான் நானும்:-) இப்படி ஒரு கால கட்டத்துல நான் ரொம்ப மதிக்குற எங்க chemistry சார் ஒரு வருஷம் commercial டிராமா ஒண்ணு include பண்ணினாரு. இதுல நமக்கு ஒரு lengthஆன character வேற. Bank மேனேஜர் Role. அட அந்த get-up ல நான் போட்ட Tie length கூட இல்ல என் டயலாக். Stageல நின்னு அந்த டயலாக் சொல்லறதுக்குள்ள நான் பட்ட அவஸ்தை இருக்கே..அய்யோயோயோ.. ஆன stageல நம்மள focus ஆகி இருக்குற powerful lightsல கீழ இருக்குற கும்பல் கண்ணுக்கு தெரியாது. so பயமில்லாம ஏதோ சமாளிச்சேன்:-) வாழ்க்கைல சில அனுபவங்கள் trainல மீட் பண்ற ஒரு அழகான பொண்ணு மாதிரி. பிடிச்சா உடனே பேசிடணும். அப்புறம் இதை மாதிரி ஒரே trainல ஒரே coachல ஒண்ணா travel பண்ணற வாய்ப்பு கிடைக்காது :-) அபூர்வ அனுபவங்கள் தொடரும்... :-)
Saturday, January 21, 2012
Friday, January 20, 2012
பெண் என்னும் ஹைக்கூ
பெண்கள் ஒரு ஹைக்கூ போல..
புரிந்ததாய் நினைத்து முடிப்பதற்குள்
வேறு ஒரு அர்த்தம் தந்து சிரிப்பர் :-p
புரிந்ததாய் நினைத்து முடிப்பதற்குள்
வேறு ஒரு அர்த்தம் தந்து சிரிப்பர் :-p
Subscribe to:
Posts (Atom)

.jpg)

